தேசிய செய்திகள்

கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கம் - மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடல் + "||" + Continuous freeze of cellphone and internet service in Kashmir - closure of schools without students

கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கம் - மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடல்

கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கம் - மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடல்
கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் கா‌‌ஷ்மீர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் ஏற்கனவே நீக்கப்பட்ட போதும் கா‌‌ஷ்மீர் மண்டலத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் 38-வது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.அங்கு தொலைபேசி இணைப்புகள் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ள நிலையில், செல்போன் மற்றும் இணையதள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தனியார் தொலைபேசி மையங்களில் (எஸ்.டி.டி. பூத்) உள்ளூர் அழைப்புகளுக்கே நிமிடத்துக்கு 10 ரூபாய் வரை கொடுத்து பேச வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.


கா‌‌ஷ்மீரில் தொலைதொடர்பு சேவை சீராகாததால் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அங்கு கடந்த மாத இறுதியிலேயே பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்ட போதும், மாணவர்கள் வராததால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரம் 2019-20-ம் கல்வியாண்டின் புதிய மாணவர் சேர்க்கை நடவடிக்கையில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டு உள்ளன.இதற்கிடையே மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் போடப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று விலக்கப்பட்டது. எனினும் அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினி திருட்டு
கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினி திருடப்பட்டது.
2. காதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க..
குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை இப்போது செல்போனுடன்தான் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன.
3. போலி உதிரிபாகங்கள் விற்பனை: செல்போன் கடை விற்பனையாளர் கைது
புதுவையில் செல்போன் போலி உதிரிபாகங்களை விற்பனை செய்ததாக விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
4. ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்: பண பரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல் தொடர்பாக பணபரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.