தேசிய செய்திகள்

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு + "||" + Bank staff to protest outside Parliament against mergers

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு
வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,

வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்றம் முன்பு வருகிற 20-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.


இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘வங்கி இணைப்பை கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தப்படும். அன்றைய தினமே மத்திய மந்திரி நிர்மலாசீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் - அதிகாரி தகவல்
இணைக்கப்பட்ட வங்கிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படும் என்று வங்கி உயர் அதிகாரி தெரிவித்தார்.
2. சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல்
சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன.
3. தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்
தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.
4. இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை குண்டு வெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.