தேசிய செய்திகள்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + NEET for Medical Study: Supreme Court dismisses Indian student's petition

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பான, வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை எழுத ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் பலர் ஆங்கிலத்தை தனியாக ஒரு பாடமாக படிப்பது இல்லை. இதனால் அவர்கள் நீட் தேர்வு எழுத தகுதி இல்லாதவர்களாகி விடுகின்றனர்.


எனவே இந்த விதியை தளர்த்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மலேசியா வாழ் இந்திய மாணவி விம்ஷிகா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
3. எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் காலம் 50 மாதங்களாக குறைப்பு; பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் காலம் 54 மாதங்களில் இருந்து 50 மாதங்களாக குறைக்கப்பட்டது. மேலும் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
4. நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோ மெட்ரிக் மூலம் சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் விஜயபாஸ்கர்
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோ மெட்ரிக் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் எது நடந்தாலும் மாநில அரசுக்கு சம்பந்தம் உண்டு; கே.எஸ். அழகிரி சாடல்
தமிழகத்தில் எது நடந்தாலும் மாநில அரசுக்கு அதில் சம்பந்தம் உண்டு என கே.எஸ். அழகிரி சாடியுள்ளார்.