தேசிய செய்திகள்

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு + "||" + Roots of terrorism being nurtured by India’s neighbour, says Modi

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
மதுரா,

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் மதுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது, இந்த தாக்குதலையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக பயங்கரவாதத்தின் இன்றைய நிலை குறித்து அவர் எடுத்துரைத்தார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பயங்கரவாதம் இன்று ஒரு தத்துவமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு எல்லையும் கடந்து பரவி வரும் இது, ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகளாவிய அச்சுறுத்தலாவும் மாறிவிட்டது. இந்த பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) வளர்க்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

இந்த தத்துவம் மற்றும் பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுப்போருக்கும் எதிராக உலக நாடுகள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுத்திறமையுடன் இருப்பதாகவும், ஏற்கனவே இதை நிரூபித்துள்ள நாங்கள் எதிர்காலத்திலும் அதை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது
மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
2. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி
காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. பயங்கரவாதத்தை மோடி அரசு சகித்துக் கொள்ளாது - நாடாளுமன்றத்தில் அமித்ஷா உறுதி
பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்பதுதான் மோடி அரசின் கொள்கை என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறினார்.
4. பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் மத்தியில் மோடி பரபரப்பு பேச்சு
பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பேசிய மோடி கூறினார்.
5. பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை :பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.