தேசிய செய்திகள்

லடாக் அருகே இந்தியா-சீனா ராணுவம் மோதல் + "||" + Indian, Chinese soldiers get into scuffle in Ladakh

லடாக் அருகே இந்தியா-சீனா ராணுவம் மோதல்

லடாக் அருகே  இந்தியா-சீனா ராணுவம் மோதல்
லடாக் அருகே இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரை அடுத்த லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், பாங்கோங் ஏரி அருகே புதன்கிழமை காலையில் இந்திய ராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருந்தனர். 

அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறினர். மேலும், வெகுநேரம் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தனர். இதனால்,  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்த்துள்ளது.
2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ; முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
4. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது.
5. பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு இந்திய அணி 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.