உலக செய்திகள்

மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது + "||" + Third party reconciliation only option: Pakistan foreign minister on Kashmir issue

மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது

மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது
மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லமபாத்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, மூன்றாம் நபர் தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- “ஐரோப்பிய நாடுகளுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இது குறித்து குரல் எழுப்ப மறுக்கிறார்கள்.

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு எந்த விதமான நேர்மறை பதில்களையும் அளிக்கவில்லை.  எனவே, இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.  மூன்றாவது நாடு தலையிட்டு சமரசம் செய்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
2. “காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள்” - இம்ரான்கானுக்கு அறிவுரை கூறிய வாலிபர்
காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாலிபர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
3. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி
காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் - பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
5. காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை - அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.