தேசிய செய்திகள்

கிரீடம் வைக்க முயன்ற தொண்டரின் தலையை வெட்டுவேன் என கோபம் அடைந்த அரியானா முதல்வர் + "||" + I will chop your head off Manohar Lal Khattar loses cool during rally

கிரீடம் வைக்க முயன்ற தொண்டரின் தலையை வெட்டுவேன் என கோபம் அடைந்த அரியானா முதல்வர்

கிரீடம் வைக்க முயன்ற தொண்டரின் தலையை வெட்டுவேன் என கோபம் அடைந்த அரியானா முதல்வர்
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேரணியின் போது ஆதரவாளர்கள் தலையில் கிரீடம் வைக்க முயன்றபோது கோபம் அடைந்து தொண்டர்களை பார்த்து நான் உங்கள் தலையை வெட்டுவேன் என கூறினார்.
சண்டிகார்,

அரியானாவில்  ‘ஜான் ஆஷிர்வாத் யாத்திரை ‘ நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார்  கலந்து கொண்டார். அவர் மினி டிரக்கில் நின்று கொண்டு பேரணியில் வந்தார். அப்போது ஒரு தொண்டர் அவரது தலையில்  வெள்ளி கிரீடம் ஒன்றை வைக்க வந்தார். அப்போது கோபம் அடைந்த கட்டார் "நான் உங்கள் தலையை வெட்டுவேன்" (கர்தன் காட் தூங்கா தேரி) என கூறினார்.  அப்போது அவரது கையில் தொண்டர்கள் அளித்த கோடாரி இருந்தது

இது குறித்த  ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.  இந்த வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

கட்டார்  ஏன் கோபம் அடைந்தார். கோபமும் ஆணவமும் ஆரோக்கியத்திற்கு மோசமானது. அவர் தனது சொந்த ஆதரவாளரிடம், நான் உங்கள் தலையை வெட்டுவேன் (கர்தன் காட் தூங்கா தேரி) என்று கூறி உள்ளார்.  அப்போது நீங்கள் பொதுமக்களை  என்ன செய்வீர்கள் என சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த கட்டார், ஆட்சிக்கு வந்தபின் கட்சி இதுபோன்ற கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

யாராவது, குறிப்பாக எனது கட்சி தொண்டர்கள்  என் தலையில் ஒரு வெள்ளி கிரீடம் வைக்க முயன்றதால், நான் கோபப்பட்டேன். அதை பொறுத்துக்கொள்ள மாட்டேன். ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கலாச்சாரத்தை முடித்து விட்டோம் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் : முதல் மந்திரி மனோகர் லால் கட்டார்
அரியானாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.