தேசிய செய்திகள்

லடாக் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது + "||" + Face off between India China soldiers in Ladakh ends after meeting Army sources

லடாக் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது

லடாக் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் மோதல்:  இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது
நமது வீரர்கள் நமது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இரு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

கடந்த மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்தியா  ரத்து செய்ததையடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பதற்றமாக உள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு குறிப்பாக, சீனா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.  ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் தூதரக  நடவடிக்கைகளையும் சீனா ஆதரித்தது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய மற்றும் சீன வீரர்கள் புதன்கிழமை நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். ஒரு உள்ளூர் தூதுக்குழு அளவிலான கூட்டத்திற்குப் பிறகு இது நடந்து உள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பங்கோங் த்சோ அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவக் குழு ஒன்று சீனத் தரப்பினரால் தடுக்கப்பட்டது. அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறி உள்ளனர். நமது வீரர்கள் நமது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு  உள்ளனர் என ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சுசூலில் எல்லை பணியாளர் தூதுக்குழு கூட்டம் உடனடியாக  கூட்டப்பட்டது. அதன் பின்னர் பிரச்சினை தீர்க்கப்பட்டது என ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.

மீறல்கள் என்பது உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஐ.சி) உடன் ஒரு பொதுவான அம்சமாகும், மேலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்பினரும் பல வழிமுறைகளை  ஏற்படுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு மோடி, சீன அதிபர்  ஜின்பிங்கிற்கு இடையிலான வுஹான் முறைசாரா உச்சிமாநாட்டில்,  ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் உரிமைக்கோரல்களைச் செயல்படுத்த நடத்துகின்ற ரோந்துப் பணிகளின் போது முகம் சுளிப்பதைத் தவிர்க்குமாறு இராணுவத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக  இராணுவ வட்டாரங்கள் முன்னர் தெரிவித்து இருந்தன.

அதன்படி, ரோந்துப் பணிகளின் போது எதிரெதிரே சந்தித்து கொள்ளக்கூடாது  என்பதற்காக பரவலாக நேரம் ஒதுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் அருகே இந்தியா-சீனா ராணுவம் மோதல்
லடாக் அருகே இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
2. ‘இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்’ - பாகிஸ்தான் மந்திரி குரேஷி சொல்கிறார்
இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர் என பாகிஸ்தான் மந்திரி குரேஷி கூறினார்.
3. இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ‘அணு ஆயுதம் ஏந்திச்சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது’ - நள்ளிரவில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் நடத்தி உள்ளது.
5. இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்
இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.