தேசிய செய்திகள்

மொபைல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்தவர் பாம்புகள் கடித்து பலி + "||" + UP woman sits on snakes while talking on phone; gets bitten, dies

மொபைல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்தவர் பாம்புகள் கடித்து பலி

மொபைல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்தவர் பாம்புகள் கடித்து பலி
மொபைல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்தவர் பாம்புகள் கடித்து பலியானார்.
கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம்  ரியனவ் கிராமத்தைச் சேர்ந்தவர்  ஜெய் சிங் யாதவ்.  இவரது மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில்  பணிபுரிந்து வருகிறார். 

சம்பவத்தன்று  கீதா தனது கணவனுடன் மொபைல்போனில் பேசினார்.  அப்போது போனில் பேசியபடியே  சென்று அவர் தனது படுக்கையில் அமர்ந்து உள்ளார். அப்போது படுக்கையில் இருந்த பாம்புகள் அவரை ஆவேசமாக சரமாரியாக கடித்து  உள்ளன. இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக  உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிர் இழந்தார்.  

உறவினர்கள்  மற்றும் பக்கத்து வீட்டினர்  கீதாவின் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, பாம்புகள் இன்னும் படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தன. கோபமடைந்த அவர்கள் பாம்புகளை அடித்து கொன்றனர்.

கால்நடை நிபுணர்கள் கூறுகையில், பாம்புகள் மீது அந்தப் பெண் அமர்ந்தபோது பாம்புகள்  இனச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்தன என கூறினார்.