தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு + "||" + Delhi High Court has issued notice to CBI

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நீதிமன்ற காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.
புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சிபிஐ பதிலளிக்குமாறு கோரி நோட்டீஸ் விடுத்தது. மேலும், மனு மீதான விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே, நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.