தேசிய செய்திகள்

”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு + "||" + Congress sources:Sonia Gandhi at party meeting said democracy is at peril

”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு

”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்

கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி,  "பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இழப்புகள் பெருகி வருகின்றன. பெருகிவரும் இழப்புகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப அரசு முன்னெப்போது இல்லாத  வகையில் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகிறது.

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. உத்தரவுகள் மிகவும் ஆபத்தான முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. காந்தி, படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உண்மையான செய்திகள், தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது" என பேசியதாக  கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.
2. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
3. மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி
மே.17 ஆம் தேதிக்கு பிறகு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்
வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலில் பாஜகவின் நண்பர்கள் இடம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
5. பா.ஜனதா தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸை பரப்புகிறது - சோனியா காந்தி
பா.ஜனதா தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸை பரப்புகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.