தேசிய செய்திகள்

கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்" + "||" + 100 days of Modi 2.0 govt This is just a trailer wait for the whole picture says PM

கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்"

கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்"
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் என கூறினார்.
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில  தலைநகர் ராஞ்சியில்  பிரபாத் தாரா மைதானத்தில்  பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது,  "கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்தது, முழுப் படமும்  இனிமேல்தான் காட்டப்பட உள்ளது" என்று கூறினார்.

பிரதமர் மோடி  பேசும்போது கூறியதாவது:

ஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்து உள்ளது.  அதே நேரத்தில் முழு படமும் இனிமேல் தான் காட்டப்பட  உள்ளது. (கூட்டம்  ஆரவாரம் செய்தது)

தாங்கள் நாட்டிற்கு மேலானவர்கள் என்று நினைத்தவர்கள் தற்போது நீதிமன்றங்களைச் சுற்றிவருகிறார்கள்… இன்று நாடு ஒருபோதும் காணாத வேகத்துடன் முன்னேறி வருகிறது என கூறினார்.

முன்னதாக,  மோடி நாட்டின் இரண்டாவது மல்டி-மாடல் நீர்வழி முனையத்தை சாஹிப்கஞ்சில் நாட்டிற்காக அர்ப்பணித்தார். புதிதாக கட்டப்பட்ட மாநில சட்டமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் ராஞ்சியில் புதிய மாநில செயலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவை தவிர, கிசான் மான் தன் யோஜ்னா, குத்ரா வியாபாரி டுகந்தர் ஸ்வரோஜ்கர் ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளி திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
2. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
3. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார் பிரதமர் மோடி
அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார்.
4. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.
5. திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் நேற்று 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.