கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு + "||" + India’s squad for 3 Tests against South Africa announced

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  வருகிற அக்டோபர் 2ந்தேதி முதல் தொடங்கும் இந்த போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), அனுமன் விகாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஆவர்.

இதில், வெஸ்ட் இண்டீசில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாததற்காக கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்படவில்லை.  டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக கில் விளையாட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம்: கங்குலி
தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.