கிரிக்கெட்

சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு + "||" + From international match dhoni about to retire The information released is incorrect The selection committee

சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு

சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
மும்பை

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ்.டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார்  டோனி.

அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ்.டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.

இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்.

எம்எஸ்.டோனியுடனான முக்கியமான நிகழ்வை விராட் கோலி  தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வை முடிவு எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், இன்று இரவு 7 மணிக்கு டோனி நிருபர்களை சந்திக்க  போவதாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இன்று ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக  வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார். ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
3. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ; இந்தியா முதலில் பந்து வீச்சு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.