தேசிய செய்திகள்

பொருளாதார நிலையை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம் + "||" + Congress plans to fight the biggest nationwide

பொருளாதார நிலையை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

பொருளாதார நிலையை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்
நாட்டின் பொருளாதார நிலையை கண்டித்து வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது. அந்த சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேசி வேணுகோபால் கூறுகையில்,

 ''பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்  என தெரிவித்தார்.