தேசிய செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு திட்டம் - மத்திய மந்திரி தகவல் + "||" + Government Has Special Strategy For Pakistan-Occupied Kashmir: VK Singh

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு திட்டம் - மத்திய மந்திரி தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு திட்டம் - மத்திய மந்திரி தகவல்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
குவாலியர், 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்போம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத், ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் படைகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. ஆனால் இதில் முடிவு எடுக்க வேண்டியது அரசுதான்’ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், இது குறித்து மத்திய மந்திரியும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ‘இது போன்ற விவகாரங்கள் எல்லாம் பொதுவெளியில் பேசுவது இல்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது. அது செயல்படுத்தப்படும்’ என்று கூறினார்.