உலக செய்திகள்

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை மந்திரிகளுடன், கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை + "||" + Kanimozhi MP with Sri Lankan ministers Negotiated

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை மந்திரிகளுடன், கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை மந்திரிகளுடன், கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை
இலங்கை தலைநகர் கொழும்புவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை மந்திரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கொழும்பு, 

இலங்கை தலைநகர் கொழும்புவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை மந்திரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இலங்கை சார்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இணை மந்திரிகள் திலிப் ஆராய்ச்சி, அமீர் அலி மற்றும் ஜாஹிர் மவுலானா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு இறுதியில் சிறப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

2 நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்மானம் எதிர்வரும் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இலங்கை மந்திரிகள் தெரிவித்தனர்.