மாநில செய்திகள்

உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது + "||" + The World Tamil Poets Conference is taking place in Cambodia

உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது

உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது
உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் 2 நாட்கள் நடக்கிறது.
சென்னை,

கம்போடியா நாட்டில் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு வருகிற 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஒரு முன்னோட்ட பாடல் குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் டாக்டர் திருத்தணிகாசலம், கம்போடியாவின் அங்கோர் தமிழ்சங்கத்தின் தலைவர் மா.சீனிவாசராவ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

200 பேர் பங்கேற்பு

கம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து இந்த மாநாட்டை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 200 தமிழ் கவிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். கவிஞர் கண்மணி குணசேகரன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

திருக்குறள் மொழி பெயர்க் கப்பட்டு கம்போடியா நாட்டின் கேமர் மொழியில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின்போது இசையமைப்பாளர்-கவிஞர் காந்திதாசன் உடனிருந்தார்.