உலக செய்திகள்

எங்களை நம்புவது இல்லை உலக மக்கள் இந்தியாவையே நம்புகிறார்கள் பாகிஸ்தான் மந்திரி புலம்பல் + "||" + Ruling elite destroyed country's image internationally, world trusts India not us: Pakistan interior minister

எங்களை நம்புவது இல்லை உலக மக்கள் இந்தியாவையே நம்புகிறார்கள் பாகிஸ்தான் மந்திரி புலம்பல்

எங்களை நம்புவது இல்லை உலக மக்கள் இந்தியாவையே நம்புகிறார்கள் பாகிஸ்தான் மந்திரி புலம்பல்
பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு உள்துறை மந்திரி இஜாஸ் அகமது ஷா கலந்து கொண்டார்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு உள்துறை மந்திரி இஜாஸ் அகமது ஷா கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:-

உலக மக்கள், பாகிஸ்தானை நம்ப மறுக்கிறார்கள். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறார்கள், மக்களுக்கு மருந்து பொருட்கள் தருவதில்லை என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் நம்ப மறுக்கிறார்கள். இந்தியாவைத்தான் நம்புகிறார்கள்.

பாகிஸ்தானை ஆண்ட உயர்தர வர்க்க ஆட்சியாளர்கள், இந்த நாட்டை அழித்து விட்டார்கள். இதன் நற்பெயரை அழித்து விட்டார்கள். அதனால், பாகிஸ்தான் பொறுப்பான நாடு அல்ல என்று மக்கள் கருதுகிறார்கள். பிரதமராக இருந்த எல்லோரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தான் தற்போது ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.