மாநில செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது + "||" + Statue of Nataraja bring to Tamil Nadu

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்னைக்குக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை,

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் முன்னதாக தெரிவித்தார்.

இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நடராஜர் சிலை இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.  தமிழகம் திரும்பிய பஞ்சலோக நடராஜர் சிலைக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.