உலக செய்திகள்

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாக்.கிற்கு எதிராக திரும்பியுள்ளனர்: இம்ரான்கான் + "||" + Pakistani PM Imran Khan: In 80s we were training these Mujahideen people to do jihad against Soviet when they occupied Afghanistan.

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாக்.கிற்கு எதிராக திரும்பியுள்ளனர்: இம்ரான்கான்

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாக்.கிற்கு எதிராக திரும்பியுள்ளனர்: இம்ரான்கான்
அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத், 

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவை சாடியுள்ளார். இம்ரான் கான் மேலும் கூறுகையில், “  1980 களில் சோவியத் ரஷ்யா  ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை மீட்க முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. இந்த பயிற்சிக்கு அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி கொடுத்தது. 

தற்போது,  பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்களை பயங்கரவாதிகள் என்று, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கா கூறுகிறது. இது மிகப்பெரிய முரணாகும். பாகிஸ்தான் இந்த பிரச்சினையில் நடுநிலை வகித்து இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில், இந்த விஷயத்தில் தலையிட்டதால், தற்போது அதே குழுக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன.   

பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70 ஆயிரம் பேரையும் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது.  இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றி பெறாததற்கு நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம். இது முற்றிலும் நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
எல்லையில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
2. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் மரணம்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
3. கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர தனது தூதரக தொடர்புகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்
பயங்கரவாத நிதியுதவிக்காக கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் தனது தூதரக தொடர்புகளை பயன்படுத்துகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
4. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது - இந்தியாவிடம் ஆதாரம்
பயங்கரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது.
5. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...