தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம் + "||" + Narendra Modi to visit U.S. from September 21

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,

செப்டம்பர் 21 ந்தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி   செப்டம்பர் 27 ந்தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருடாந்திர  ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர்  நியூயார்க்கில் தொடர்ச்சியாக பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்  என வெளியுறவுத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்  குமார் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் செப்டம்பர் 21-ந் தேதி மாலை  முதல் செப்டம்பர் 27-ந் தேதி மதியம் வரை இருக்கும். இந்த பயணத்தின் போது ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும்  நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.

ஐநா பொதுச்சபையின் 74வது அமர்வில்,  பட்டியலின்படி பிரதமர் மோடி செப்டம்பர் 27-ந் தேதி காலை உரையாற்றுகிறார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
2. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
3. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
5. பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.