மாநில செய்திகள்

இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி + "||" + The banner collapsed young girl Death Incident Severe action against those responsible Minister SB Velumani

இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
பேனர் சரிந்து இளம்பெண் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ (வயது 23). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபல் மீது பள்ளிகரனை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகள் மெத்தனமே காரணம் என சென்னை ஐகோர்ட்  கண்டனம் தெரிவித்தது. 

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை காந்தி பார்க் பகுதியில் ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை காந்திபார்க்பகுதியில்ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை அமைச்சர்எஸ்.பி.வேலுமணிதிறந்து வைத்தார்.
2. மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும்வரை, பொதுமக்களிடம் கூடுதலாக வரி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
வரி மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும் வரை பொதுமக்களிடம் கூடுதலாக வரி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
3. பொள்ளாச்சி அருகே, கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி
பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
4. கோவை விமான நிலைய விரிவாக்கம், நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
5. கோவை மாவட்டத்தில் கனமழையால் பாதிப்பு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.