மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக + "||" + Avoid placing banner, its disrupt people: AIADMK

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக
மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று  தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில்,  மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக  அறிவித்துள்ளது. 

"கட்சி நிகழ்ச்சிகளில், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது.  கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அறியாமையால் சிலர் செய்யும் செயலால் மக்கள் பாதிப்படைவதால் மிகுந்த வேதனை அடைகிறோம். தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம்
தியாகராயநகர் எம்எல்ஏ சத்யாவை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுக தலைமை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2. அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்: முதல்வர் பழனிசாமி
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.
3. அதிமுக எம்.பி.க்கள் அமளி; மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
4. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு
20 ஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.