உலக செய்திகள்

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான் + "||" + Pak FM Qureshi warns of accidental war with India

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜெனீவா

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஷா மஹ்மூத் குரேஷி, கூட்டத்திற்கிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது. போர் நடைபெற்றால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் புரிந்து கொள்ளும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிஷெல் பேச்லெட்டை சந்தித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 அழைப்பை ஏற்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிஷெல் பேச்லெட்டும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வைத்து பார்த்தால் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண பன்முக அமைப்பு அல்லது 3வது தரப்பின் மத்தியஸ்தம் தேவைப்படலாம்  அந்தப் பணியை அமெரிக்கா செய்யும் பட்சத்தில் அது முக்கியத்துவம் பெறும். ஏனெனில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஷா மஹ்மூத் குரேஷி கடந்த செவ்வாய்க்கிழமை பேசியபோது, "ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். அப்போது இந்திய தரப்பில், "சர்வதேச பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தானிடம் இருந்து வரும் ஜோடிக்கப்பட்ட கதை" என்று பதிலடி கொடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: “முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தால் நல்ல ஸ்கோராக இருக்கும்” ரஹானே சொல்கிறார்
வெலிங்டனில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
3. இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.
4. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து உள்ளதாக ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
5. பிரிட்டன், பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா
உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருப்பதாக அமெரிக்காவைச்சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.