தேசிய செய்திகள்

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி + "||" + A special court in Delhi allows Robert Vadra's application seeking permission to travel abroad. He has been granted anticipatory bail in a money laundering case

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது லண்டனில் நிலம் வாங்கியதில் முறைகேடான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ராபர்ட் வதேரா சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ராபர்ட் வதேரா வருகிற 21-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை வர்த்தகம் தொடர்பாக ஸ்பெயின் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.  

ஏற்கனவே 2 முறை  ராபர்ட் வதேராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ராபர்ட் வதேரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம்,  வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கி உள்ளது.