தேசிய செய்திகள்

முத்தலாக் தடைச் சட்டம்: வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் + "||" + Muslim Advocate Association of Tamil Nadu approaches the Supreme Court

முத்தலாக் தடைச் சட்டம்: வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

முத்தலாக் தடைச் சட்டம்: வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் வழக்கறிஞர் சங்கம்  சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் கமலேஷ் குமார் மித்ரா ஆஜராகினார்.

அவர் வாதிடுகையில், " மத்திய அரசு முத்தலாக் நடைமுறையைத் தடை செய்ய கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டம் அடிப்படை உரிமையை மீறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்போது, முஸ்லிம் பெண்களும், ஆண்களும் தங்களின் அடிப்படை உரிமையை உடனடியாக இழந்து விடுவார்கள். இதனால், முத்தலாக் தடைச் சட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து அந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து, முகேஷ் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டது.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
5. சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது
நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்க்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது டிசம்பர் 17 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.