தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி + "||" + Youth wing and student wing of Communist Party of India (Marxist), stage a protest alleging unemployment in the state Police fire tear-gas at protesters

கொல்கத்தாவில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி

கொல்கத்தாவில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி
மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாகக் கூறி அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி இடதுசாரிகள் பேரணியாக சென்றனர்.

சிங்கூர் எனுமிடத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி 40 கிலோ மீட்டர்களைக் கடந்து தலைநகர் கொல்கத்தாவுக்கு இன்று வந்தடைந்தது. இந்த பேரணியில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதி போராட்ட களம் போல் காட்சி அளித்தது.