டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது இஸ்லாமாபாத்தில் போட்டியா? + "||" + avis Cup: India to take on Pakistan in November after security review

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது இஸ்லாமாபாத்தில் போட்டியா?

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது இஸ்லாமாபாத்தில் போட்டியா?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீர் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்ற சூழ்நிலையே இந்த தொடர் தள்ளிப் போக காரணம் என கூறப்பட்டாலும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து தொடரை தள்ளி வைத்து இருந்தது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் இஸ்லாமாபாத்தில் நவ. 29, 30 அல்லது நவ.30, டிச.1ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இஸ்லாமாபாத்தில் போட்டியை நடத்தலாமா அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தலாமா என நவ.4-ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.