தேசிய செய்திகள்

பீகாரில் பா.ஜனதா தலைவர் கழுத்தை அறுத்துக்கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம் + "||" + Bihar: Maoist-turned-BJP leader found murdered in Munger

பீகாரில் பா.ஜனதா தலைவர் கழுத்தை அறுத்துக்கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

பீகாரில் பா.ஜனதா தலைவர் கழுத்தை அறுத்துக்கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்
பீகாரில் பா.ஜனதா தலைவரை மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்துக்கொலை செய்தனர்.
பாட்னா, 

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் சத்கார்வா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் கோடா (வயது 40). பா.ஜனதாவின் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

இவரை சத்கார்வா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அந்த இடத்தில் சில துண்டு பிரசுரங்களையும் விட்டுச் சென்றனர். அவற்றில், தினேஷ் கோடா போலீஸ் உளவாளியாக செயல்பட்டதாகவும், தங்கள் பெயரில் மக்களிடம் வரி வசூலித்து வந்ததாகவும் மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.