தேசிய செய்திகள்

மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி + "||" + "Don't Want To Watch Rest Of Film": Kapil Sibal On PM's "Trailer" Comment

மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி

மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி
பிரதமர் மோடி சொன்ன டிரெய்லர் கருத்துக்கு, மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை என கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி,

பயங்கரவாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசின் 100 நாள் சாதனைகளை சமீபத்தில் பட்டியலிட்டிருந்த பிரதமர் மோடி, இது வெறும் ‘டிரெய்லர்’தான் எனவும், முழு படமும் இனிதான் வர இருப்பதாகவும் கூறியிருந்தார்.


மோடியின் இந்த கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவரான கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “பிரதமர் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை டிரெய்லர் இதுதான். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு அரசின் வருமானம் 22 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தகுந்தது. பொதுமக்கள் நுகர்வோராக பொருள்களை வாங்குவது கடுமையாக குறைந்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிவு குறிப்பிடத்தக்கது. கடந்த 10 மாதங்களாக மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிந்து வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருமானம்,  இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் வரவு குறைந்துள்ளது. ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்கள் மீதமுள்ள மோடி குறிப்பிட்ட முழுப் படத்தையும் பார்க்க விரும்பவில்லை. டிரெய்லரை பார்த்ததே போதும்” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர்
மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
2. மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை
மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
3. இந்தி பற்றிய அமித்‌ஷாவின் கருத்து: கூட்டாட்சி மீதான தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
இந்தி பற்றி அமித்‌ஷா தெரிவித்த கருத்து, கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
4. மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் உள்ளார் - முத்தரசன்
மோடியை ஆதரித்து பேச வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.
5. அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி, அமித்ஷா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.