உலக செய்திகள்

வானில் வால் நட்சத்திரம் தோன்றியதா? - கிரீமிய விண்வெளி விஞ்ஞானி பார்த்ததாக தகவல் + "||" + Did the comet appear in the sky? - Crimea space scientist reported

வானில் வால் நட்சத்திரம் தோன்றியதா? - கிரீமிய விண்வெளி விஞ்ஞானி பார்த்ததாக தகவல்

வானில் வால் நட்சத்திரம் தோன்றியதா? - கிரீமிய விண்வெளி விஞ்ஞானி பார்த்ததாக தகவல்
வானில் வால் நட்சத்திரம் தோன்றியதை கிரீமிய விண்வெளி விஞ்ஞானி பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ,

விண்வெளியில் தோன்றுகிற அதிசயங்களில் ஒன்று, வால் நட்சத்திரம்.

இந்த வால்நட்சத்திரம் தோன்றுவது ஆபத்தானது என்று கருதப்பட்ட காலம் ஒன்று உண்டு.

இப்போது அப்படிப்பட்ட கருத்துகள் இருப்பதாக தெரியவில்லை.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி, சூரிய மண்டலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு வால் நட்சத்திரத்தை கிரீமியாவை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கென்னடி போரிசோவ் தொலைநோக்கி (டெலஸ்கோப்) வழியாக பார்த்துள்ளார். இந்த தகவலை சர்வதேச வானியல் கூட்டமைப்பு (ஐ.ஏ.யு.) வெளியிட்டுள்ளது. 

இந்த வால்நட்சத்திரம் ஒரு வருடமாவது காணக்கூடியதாக இருக்கும் என விண்வெளி விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த வால் நட்சத்திரத்துக்கு தற்காலிகமாக சி/2019/கியூ4/ போரிசோவ் என பெயரிடப்பட்டுள்ளது.