உலக செய்திகள்

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + Three agreements signed between India and Switzerland

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பேர்ன்,

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8 ஆம் தேதி) தனது சுற்றுப் பயணத்தை துவங்கிய அவர் ஐஸ்லாந்தில் இருதரப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றிய பிறகு நேற்று  சுவிட்ஸர்லாந்து சென்றார்.

அவரை சுவிட்சர்லாந்து ஜனாதிபதி உவேலி மௌரர் வரவேற்றார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: 1. பருவநிலை மாற்றம் குறித்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு  2. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணி அமைப்பது  3.லாசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழிக்கான அமர்வை புதுப்பித்தல்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்துவது என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். மேலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ராம் நாத கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக நாளை ஸ்லோவேனியாவிற்கு செல்கிறார்.  செப்டம்பர் 17 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா திரும்புகிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் -இந்திய ராணுவ தலைமை தளபதி
இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.
2. வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல் இந்தியா கவலை
வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்சமாக ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.
3. அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது.
4. இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும்: ‘ரபேல்’ விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் - பிரான்ஸ் நிறுவனம் புதிய தகவல்கள்
‘ரபேல்’ விமானத்தில் உள்ள அதிநவீன ஏவுகணைகளால் இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
5. இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...