தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு + "||" + Uttar Pradesh: Statue of Mahatma Gandhi vandalised by unidentified miscreants

உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு

உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு
உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்தி இண்டர் காலேஜில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டது. 

இது பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிலையின் உடைந்த தலைப்பகுதி சரிசெய்யப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பேசிய காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு அவதேஷ் சிங், “மகாத்மா காந்தியின் சிலை 1970 ஆம் ஆண்டு இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் சிலைக்கு சேதம் விளைவித்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருவதால், அதற்கு முன்னதாக சேதமடைந்த சிலையை நீக்கிவிட்டு புதிய சிலையை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
2. விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
விஜயதசமியையொட்டி முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.
3. குளக்கரையில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
குடவாசல் அருகே குளக்கரையில் ஐம்பொன்சிலை கண்டெடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
4. கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் நேற்று அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
5. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.