தேசிய செய்திகள்

74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம் + "||" + P. Chidambaram likely to celebrate 74th Birthday in Tihar

74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்

74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று 74-வது பிறந்த தினமாகும்.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்,  கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், கடந்த 5 ஆம் தேதி முதல்  14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.  இதனால், வரும் 19-ம் தேதிவரை சிதம்பரம் திகார் சிறையில்தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது. 

 நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு திங்கள் கிழமை (இன்று) 74-வது பிறந்ததினம் ஆகும்.  முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முதல் முறையாக தனது பிறந்தநாளை சிறையில் கழிக்க உள்ளார்.

வழக்கமாக தனது பிறந்தநாளை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் சிதம்பரம், கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்தை பெற்றுக்கொள்வார். ஆனால் இந்த முறை ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருப்பதால், தனது பிறந்தநாளை  முதல்முறையாக சிறையில் கழிக்க உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.
3. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
அனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.
4. ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறையின் மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
5. ”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு
”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” என ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.