மாநில செய்திகள்

நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட: ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயர்வு - நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது + "||" + High prices of milk products From the day after tomorrow Comes into effect

நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட: ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயர்வு - நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது

நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட: ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயர்வு - நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது
நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயருகிறது. இந்த புதிய நடைமுறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை,

பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக ‘ஆவின்’ பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 19-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

‘ஆவின்’ மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, ஆவினின் உப பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக ‘ஆவின்’ உயர் அதிகாரிகள் இரு கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி எந்தெந்த பொருட்களின் விலையை உயர்த்தலாம்? என்பது குறித்து ஆலோசித்தனர். இதில் முதற்கட்டமாக சில உப பொருட்களின் விலையை மட்டும் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி நெய், பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், டிலைட் பால் மற்றும் பேவர்டு மில்க் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த உப பொருட்களின் விலை ஏற்றம் 18-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் அமலுக்கு வருகிறது என்று ‘ஆவின்’ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில் நெய் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் பவுடர் மற்றும் பனீரின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. வெண்ணெய் விலை ½ கிலோவுக்கு ரூ.10-ம், பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.20-ம், டிலைட் பாலின் விலை ½ லிட்டருக்கு ரூ.4-ம், பேவர்டு மில்க்கின் விலையில் ரூ.3-ம், தயிர் விலையில் ரூ.2-ம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதர பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ‘ஆவின்’ பாலகங்களில் 120 மில்லி லிட்டர் சூடான பால் விலை ரூ.7-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சோனியா காந்தி கண்டனம்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
2. மதுபானங்கள் விலை உயர்வு - குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்தது
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்தது.
3. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.