மாநில செய்திகள்

பேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் + "||" + DMK to file affidavit in Chennai High Court

பேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னையில் சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது.

அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதன்பின்னர் திமுகவின் நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் தொண்டர்கள் வைக்கக் கூடாது எனவும், மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். 

கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது மட்டுமல்லாமல், பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்களை அகற்றக்கோரியும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.