உலக செய்திகள்

சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம் + "||" + Pakistan To Send First Astronaut To Space In 2022 With China's Help

சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்

சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்
பாகிஸ்தானில் இருந்து ஒரு விண்வெளி வீரரை முதன் முறையாக சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவுடன் இணைந்து 2022-ல் முதன் முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப அமைச்சர் சௌத்ரி ஃபவாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரருக்கான தேர்வு 2020ம் ஆண்டு தொடங்கும். முதலில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 25 பேராக குறைக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்.

விண்வெளி வீரரை தேர்ந்தெடுப்பதில் பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்காற்றும் எனவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் மேலும் பல நன்மைகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, சீன ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதையில் பாகிஸ்தான் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியதையடுத்து பாகிஸ்தான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவரிடம் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. இந்தியாவுடன் தபால் போக்குவரத்தை நிறுத்திய பாகிஸ்தான் - விதிமீறல் என மத்திய மந்திரி கண்டனம்
இந்தியாவுடனான தபால் போக்குவரத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது. இது சர்வதேச விதிமீறல் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. 3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: இந்தியாவின் கூற்றை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததாக கூறிய இந்தியாவின் தகவலை பாகிஸ்தான் இராணுவம் மறுத்து உள்ளது.
4. பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் - பிரதமர் மோடி உறுதி
பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
5. நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் அமைதிப்படுத்தும் பாகிஸ்தான்
நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தான் அமைதிப்படுத்தி வருகிறது.