தேசிய செய்திகள்

போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது - நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு + "||" + Severe penalties for traffic violations: Now not in force in Kerala - Decided to write Letter to Nitin Gadkari

போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது - நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு

போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது - நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு
கேரளாவில் போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம் இப்போது அமலுக்கு வராது என்றும், நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

புதிய மோட்டார் வாகன சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள், அபராத தொகையை குறைத்துள்ளன. மராட்டிய மாநில அரசு, அபராத தொகையை குறைக்குமாறு மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளது.


கேரளாவில், ஓணம் கொண்டாட்டம் காரணமாக, அபராத உயர்வு இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில், கேரள மாநில போக்குவரத்து மந்திரி ஏ.கே.சசீந்திரன், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு, ஏ.கே.சசீந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “அபராத தொகை உயர்வு தொடர்பாக சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத உள்ளேன். அவரிடம் இருந்து பதில் கிடைக்கும்வரை, புதிய அபராதத்தை அமல்படுத்துவதை மேலும் சில நாட்களுக்கு தள்ளிப்போட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து விதிமீறல்: பா.ஜனதா முன்னாள் மந்திரிக்கு ரூ.4000 அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி விஜய் கோயலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
2. போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது
போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
3. போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு - கேரள அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பாதியாக குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது.
4. மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் 4,262 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் - போலீசார் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ஒரே நாளில் 4,262 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
5. போக்குவரத்து விதிமீறல் : மாநில அரசுகள் விரும்பினால் அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் -நிதின் கட்கரி
மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.