தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல் + "||" + Supreme Court judge, Justice Mohan Shantanagoudar, one of the judges on the bench hearing the Karnataka disqualified MLAs case, recuses himself from the matter

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல்

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வாதாடிய நீதிபதி விலகி உள்ளார்.
புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டனர். இதனால் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.


இந்த வழக்கு விசாரணையில் இருந்து நேற்று நீதிபதி எம்.சந்தானகவுடர் விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று மட்டும் தெரிவித்தார். பதிவாளர் துறை இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டது.

விசாரணையில் இருந்து விலகிய எம்.சந்தானகவுடர் 2003-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் வயலில் இறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
கர்நாடகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வயலில் இறங்கிய சம்பவம் நிகழ்ந்தது.
2. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
3. கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்’ நீடிக்கும் நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்‘ நீடிக்கும் நிலையில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
4. கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை: குமாரசாமி திட்டவட்டம்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.
5. நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ
கர்நாடகாவை சேர்ந்த ஓவியர் படால் நஞ்சுண்டசாமி எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.