தேசிய செய்திகள்

ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார் - நிதி கமிஷன் உறுப்பினர்களுடன் சந்திப்பு + "||" + Army Commander Lea went to the area - meeting with members of the Finance Commission

ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார் - நிதி கமிஷன் உறுப்பினர்களுடன் சந்திப்பு

ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார் - நிதி கமிஷன் உறுப்பினர்களுடன் சந்திப்பு
ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார். அங்கு நிதி கமிஷன் உறுப்பினர்களை அவர் சந்தித்தார்.
ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் என்ன சூழ்நிலையில் ராணுவம் பணியாற்றுகிறது என்பதை அறியவும், ராணுவ நவீனமயமாக்கலுக்கு தேவையான நிதி தேவையை மதிப்பிடவும் 15-வது நிதி கமிஷன், லடாக் பிராந்தியத்துக்கு சென்றுள்ளது.

இதையடுத்து, ராணுவ தளபதி பிபின் ராவத், நேற்று லடாக் பிராந்தியத்தின் லே பகுதிக்கு சென்றார். அங்கு 15-வது நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். மோசமான நிலப்பரப்பு, வானிலையிலும், உயரமான பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதால், அதை சமாளிக்க விசேஷ சாதனங்களும், திறன்களும் அளிக்கப்பட வேண்டும் என்று பிபின் ராவத் வலியுறுத்தினார். ராணுவத்துக்கு எல்லாவித உதவிகளும் அளிக்கப்படும் என்று நிதி கமிஷன் ஊழியர்கள் உறுதி அளித்தனர்.