தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை + "||" + Kerala courts are bound by the Supreme Court order

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கேரளா கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கேரளாவில் மலங்கரா கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை நடத்துவது தொடர்பான ஒரு வழக்கில் 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டு வேறு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அங்குள்ள கோர்ட்டுகள் கட்டுப்பட்டவை என்று ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.


இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில், ‘கேரளாவில் உள்ள கோர்ட்டுகள் எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையோ, தீர்ப்பையோ மீறினால் தீவிரமாக கவனிக்கப்படும். இந்த உத்தரவை கேரளாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் அனுப்ப வேண்டும். மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக இன்னும் எத்தனை மனுக்கள் அங்குள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன என்றும், கேரள ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் 3 மாதங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் காவல் உத்தரவு பெங்களூருக்கு அனுப்பி வைப்பு: ‘கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரிப்போம்’ போலீஸ் கமி‌‌ஷனர் பேட்டி
போலீஸ் காவல் உத்தரவு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ‘கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரிப்போம்’ என்றும் போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.
2. அயோத்தி வழக்கு: வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அயோத்தி வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது.
3. வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கவும், ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது.
4. அயோத்தி வழக்கு: மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய ரஞ்சன் கோகாய் உத்தரவு
அயோத்தி வழக்கில் இன்றுடன் வாதங்களை நிறைவு செய்ய ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
5. 25 ஆண்டுகளுக்கு பிறகு காவல்கிணறில் 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே உத்தரவு
25 ஆண்டுகளுக்கு பிறகு காவல் கிணறு ரெயில் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும்.