மாநில செய்திகள்

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன் + "||" + Attempts to contact Vikram Lander Not rewarding ISRO Shivan

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன்

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன்
விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.
சென்னை

நிலவை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரயானிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகே 400 மீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரமிடமிருந்து சிக்னலை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விக்ரமை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் ஆர்பிட்டரும் தெளிவான படங்களை அனுப்பவில்லை. விக்ரம் லேண்டரின் ஆய்வு காலமான 14 நாட்கள் நேற்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில்  இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். 

விக்ரம் லேண்டர் குறித்து  இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? மதுரை என்ஜினீயர் பேட்டி
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து தமிழக கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.
2. சந்திரயான்-2 முடியவில்லை, விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க முயற்சிகளையும் செய்வோம்- இஸ்ரோ சிவன்
சந்திரயான்-2 கதை முடியவில்லை. மீண்டும் விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க அனைத்து முயற்சிகளையும் செய்யும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
3. நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
4. விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த இடத்தை கண்டறிய தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியின் புதிய புகைப்படங்களை நாசா படம் பிடித்து உள்ளது.