மாநில செய்திகள்

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக வைத்துள்ளார்கள் நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதிலடி + "||" + People whom Where to place They are right there Minister retaliates to actor Vijay

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக வைத்துள்ளார்கள் நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதிலடி

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக வைத்துள்ளார்கள் நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதிலடி
மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக வைத்துள்ளார்கள் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்து உள்ளார்.
கோவில்பட்டி

செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில்  நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஒரு திரைப்பட நடிகராக தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகின்றனர். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் யாருடைய பேச்சைக் கேட்டு பேசினார் எனத் தெரியவில்லை. அவரது பல படங்கள் வெளியாக அரசு நல்ல உதவி செய்துள்ளது.

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்து உள்ளார்கள். விஜய் போன்றவர்களின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை. நடிகர் விஜய்யின் படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அது அவருடைய மனசாட்சிக்கு தெரியும்.

மெர்சல் படத்துக்காக எங்களிடம் வந்தார். நாங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ, வேறுபாடோ பார்க்கவில்லை. ஆனால் பரபரப்புக்காக அந்தப்படம் ஓடுவதற்காக தன்னையும் அறியாமல் அந்தக் கருத்தை கூறியிருப்பார்.

அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார், அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும்? கமல் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறைசொல்கிறார். தான் அரைவேக்காடு என்பதை கமல்ஹாசனே ஒத்து கொண்டு உள்ளார் என கூறினார்.