உலக செய்திகள்

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது + "||" + Trump to deploy more troops to Saudi Arabia after attack

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது

தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது
ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
வாஷிங்டன்,

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமாக புக்யாக்கில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் எண்ணெய் வயல் மீதும் கடந்த 14-ந்தேதி அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்கள் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றபோதும், தாக்குதலின் பின்னால் இருந்தது ஈரான் என அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.


இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்காவோ, சவுதி அரேபியாவோ தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா கூடுதல் படையினரை அனுப்பி வைக்கிறது.

இதை அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் வாஷிங்டன் பென்டகனில் நிருபர்களிடம் பேசுகையில், “வான்தாக்குதலையும், ஏவுகணை தாக்குதல்களையும் தடுக்கிற வகையில் தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்க படையினர், சவுதிக்கு அனுப்பப்படுகின்றனர்” என கூறினார்.

ஆனால் அங்கு செல்லக்கூடிய படை வீரர்களின் எண்ணிக்கை பற்றியோ, எப்போது அவர்கள் அங்கு செல்வார்கள் என்பது பற்றியோ கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. "ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு
ஒரு சிறிய கூட்டம் சீனாவிற்கு எதிராக செயல்பட முடியாது என இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
2. சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா
சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திங்களன்று தெரிவித்தார்,
3. கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
4. கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக போராட்டம்; வன்முறை
கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது.
5. கருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு
போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால், அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரம் அடைகின்றன. 25 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.