தேசிய செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் + "||" + For Nankuneri, the Vikravandi By-election on October 21

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி   இடைத்தேர்தல்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி

டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். மராட்டிய சட்டசபை நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டசபை நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

* மராட்டியம், அரியானாவில் அடுத்த மாதம் அக்டோபர் 21 ந்தேதி தேர்தல் நடைபெறும்.  24 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

* விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24.

வேட்பு மனு தாக்கல் செப்.30ஆம் தேதி தொடக்கம்

வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாள்

2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

புதுச்சேரி காமராஜ் நகர்  சட்டப்பேரவை தொகுதிக்கான  இடைத்தேர்தல்  தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24 

வேட்பு மனு தாக்கல் செப்.30ஆம் தேதி தொடக்கம்

வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாள்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
3. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. போட்டியிடுமா? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுமா? என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் கருத்து தெரிவித்தார்.
4. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
5. தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV