மாநில செய்திகள்

இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு; + "||" + BYElection: DMK-Congress advice, There is no amorphous competition AIADMK Optional Notice

இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;

இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக - காங்கிரஸ் ஆலோசனை, அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு என தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளன.
சென்னை

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் இன்று அறிவித்தார்.  தமிழகத்தில், அக்டோபர் வாக்குப்பதிவு என்றும்  அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து 2 தொகுதிகளிலும்  தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன.  

இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்  என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.  ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்  என கூறப்பட்டு உள்ளது

அக்.6ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்தார். அவருடன் குமரி ஆனந்தன் சென்று உள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரசே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.