தேசிய செய்திகள்

மதத்தின் பெயரால் நடந்த கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு - சசி தரூர் + "||" + Killing in name of Lord Ram an insult to Hindu religion: Shashi Tharoor

மதத்தின் பெயரால் நடந்த கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு - சசி தரூர்

மதத்தின் பெயரால் நடந்த கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு - சசி தரூர்
மதத்தின் பெயரால் நடந்த கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கூறியுள்ளார்.
புனே.

புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  சசி தரூர் பேசியதாவது:- 

கடந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்து கொண்டிருக்கிறோம்?. புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டார். பிறகு, மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் கொல்லப்பட்டார். ஆனால், அது மாட்டுக்கறி அல்ல என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?

பால் பண்ணைக்காக பசுக்களை லாரியில் ஏற்றிச் செல்ல பெலு கானுக்கு லைசென்சு வழங்கப்பட்டிருந்தது. அவரும் அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு தேர்தல் வெற்றி எதனையும் செய்வதற்கும், யாரையும் கொல்வதற்கும் அதிகாரத்தை கொடுக்கிறதா?. என கேள்வி எழுப்பிய சசிதரூர், ஜெய் ஸ்ரீ ராம் என்ற பெயரில் கொலைகள் செய்வது இந்து தர்மத்திற்கு எதிரானது. நான் ஒரு இந்து தான். ஆனால் அந்த வகையான இந்து அல்ல. 

இது தான் நம்முடைய பாரதமா? இது தான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா?. அடித்துக்கொல்கின்ற போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி வற்புறுத்துகிறார்கள், இது இந்து தர்மத்திற்கு அவமானம். அதேபோல கடவுள் ராமர் பெயரை சொல்லி கொலைகள் செய்வது, அவருக்கே அவமானம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாட்ஸ் அப் சர்ச்சை: நவ.20-ல் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு விசாரணை
வாட்ஸ் அப் மூலம் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
2. ‘டெல்லி உடல்நலத்திற்கு தீங்கானது’: சசி தரூர் டுவீட்
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்து சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.