மாநில செய்திகள்

இடைத்தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மதிமுக, மமக, விசிக கட்சிகள் ஆதரவு + "||" + For DMK-Congress alliance Support the parties

இடைத்தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மதிமுக, மமக, விசிக கட்சிகள் ஆதரவு

இடைத்தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மதிமுக, மமக, விசிக கட்சிகள் ஆதரவு
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக, மமக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
சென்னை,

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ந்தேதி நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனுடன், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன. இடைத்தேர்த்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது. 

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவதாகவும், நாங்குநேரி  தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கூட்டணி கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

முதலாவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.