தேசிய செய்திகள்

ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி + "||" + Woman dies as Hyderabad Metro wall peels off, falls on her

ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி

ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பலியானார்.
ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள குகாட்பள்ளி வீட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிகாந்த் ரெட்டி. இவரது மனைவி மவுனிகா தனது உறவினரான லிகிதா என்ற பெண்ணுடன் அமீர்பேட் பகுதிக்கு மெட்ரோ ரெயிலில் சென்றார். லிகிதா தங்கி படிப்பதற்காக அங்குள்ள ஒரு விடுதியை பார்ப்பதற்காக இருவரும் சென்றிருந்தனர்.

அமீர்பேட் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால், வெளியே செல்லாமல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி உடைந்து மவுனிகாவின் தலையில் விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த மவுனிகா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மவுனிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மவுனிகாவின் கணவர் ஹரிகாந்த் ரெட்டி எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹைதராபாத் மெட்ரோ ரெயில்  மேலாளர் என்.வி.எஸ்.ரெட்டி, “கான்க்ரீட் கூரையின் கூர்மையான பகுதி சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை
விமானி அறைக்குள் இளம்பெண் ஒருவர் பயணம் செய்ததால், விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
2. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் கொலை: இளம்பெண்-காதலன் கைது
திருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
3. ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் இளம்பெண் பெற்றெடுத்த 5 குழந்தைகளில் ஒன்று உயிரிழந்து உள்ளது.